96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஆண்களுக்கும் ஏற்படும் மார்பக புற்றுநோய்.. உஷாராக இருங்கள் ஆண்களே., இந்த அறிகுறியானால் கவனம்.!
பெண்களை மட்டுமல்லாது ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. டெல்லியில் வசித்து வரும் முதியவருக்கு மார்பக புற்றுநோய் சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்த ஆய்வில் ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் இருப்பது உறுதியானது.
மருத்துவர்கள் இதுகுறித்து கூறுகையில் மார்பக புற்றுநோய் பாலினத்தை பொறுத்து ஏற்படுவது இல்லை. இருபாலரும் சரியான நேரத்தில் மருத்துவ பரிசோதனைகளை செய்வது அவசியம். துவக்கத்திலேயே மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் அனைத்தையும் சரி செய்யலாம்.
மார்பக புற்றுநோய் ஆண்களுக்கு ஏற்படும் பட்சத்தில், சிலருக்கு வலி இல்லாமல் இருக்கும். இதனால் அதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் நாளடைவில் மார்பக கட்டி ஏற்படும். அது வெடிக்கும் தருவாயில், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால் மார்பக திசு, தசை பகுதி அகப்பற்றப்படும்.
மார்பக புற்றுநோயை தாமதமாக கண்டிருந்தால் அது உடலின் பிற பகுதிகளுக்கும் பரவும் ஆபத்தும் உள்ளது. அவ்வாறு பரவாமல் இருந்தால் மார்பக புற்றுநோயோடு குணமாகிவிடும். மார்பகத்தில் கட்டி, வீக்கம் போன்றவை அறிகுறியாக இருக்கும் பட்சத்தில் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது சாலச்சிறந்தது.