தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சிகிரெட் பழக்கத்தை விட முயற்சிப்பவரா நீங்கள்?.. துளசி போதும்., 100% இயற்கை தீர்வு.. விபரம் உள்ளே.!
சிகிரெட் என்ற கொள்ளிக்கட்டையை உறிஞ்சும் பழக்கம் இன்றளவில் ஆண்-பெண் பேதமின்றி தொடங்கிவிட்டது. தனிநபரின் செயல்கள் அவரை பொறுத்தது என கடந்து சென்றாலும், அதனால் ஏற்படும் இழப்புகள் அவரை மட்டும் கட்டாயம் பாதிப்பது இல்லை.
புகை பிடிக்கும் நபரால், அவர் வெளியிடும் புகையில் உள்ள நச்சுக்கள் புகை பிடிக்காதவரின் உடல்நலத்தை எளிதில் கேள்விக்குறியாக்குகிறது. புகை பிடிப்பவரின் நுரையீரல் உட்பட உடல் உறுப்புக்கள் அதிக சேதமாகி, பின்னாளில் அது கேன்சர் வரை கொண்டு செல்கிறது.
புகைக்கு பின்னால் உள்ள பல கேடுகளை எடுத்துரைத்தாலும், அதனை புகைத்து பழகியவர்கள் இன்றோடு இறுதி என ஒவ்வொரு நாளும் அதனை புகைக்கத்தான் செய்கிறார்கள். அதனை நிறுத்த முயற்சிக்கும் சிலரும், மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் செயற்கை பொருட்களை வாங்கி சாப்பிட்டு முயற்சிக்கின்றனர். இவை பக்கவிளைவை ஏற்படுத்தலாம்.
ஆனால், இயற்கையில் மூலிகையின் ராணி என வர்ணிக்கப்படும் துளசி, புகைபிடிப்பதை நிறுத்த பேருதவி செய்கிறது. இயற்கை வைத்தியத்தை மறந்து சில ஆண்டுகளாய் செயற்கை பக்கம் திரும்பிய பலரும், கொரோனாவுக்கு பின்னர் மீண்டும் இயற்கை பக்கம் எட்டிப்பார்க்க தொடங்கியுள்ள்ளனர்.
ஆயினும் பல இயற்கை மருத்துவ குணங்கள் கொண்ட செடிகள் நம் கண்முன் இருந்தும் பலருக்கும் தெரிவது இல்லை. அவற்றை நாம் மறந்து வருகிறோம். துளசி உடலுக்கு பல நன்மைகளை அளிக்கக்கூடியது என்பது பலருக்கும் தெரியும். அதே துளசி புகைப்பதை நிறுத்தவும் உதவும்.
துளசி இலைகள் புற்றுநோயினை எதிர்த்து போராடும். நம்மை தாக்கும் தொற்றுநோயில் இருந்தும் நம்மை பாதுகாக்கும். புகைபிடிப்பதை நிறுத்த முயற்சிப்போர், அதற்கான பரிந்துரையை வழங்குவோர் கட்டாயம் துளசியை தரலாம். துளசி இலைகளை சாப்பிடுவது புகையை எடுத்துகொண்டோரின் உடலில் இருக்கும் நிக்கோட்டினை வெளியேற்ற உதவும்.இதனால் இரத்தம் சுத்திகரிக்கப்படும்.
புகைபிடிக்கும் நபர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சிக்கும் பட்சத்தில், புகைக்க ஆசை வரும்போதெல்லாம் துளசி இலைகளை மென்று சாப்பிடலாம். அதேபோல, தேநீரகங்களுக்கு சென்றால் துளசி தேநீர் வாங்கி குடிக்கலாம். நமது உடலை பாதுகாக்க நாமே முயற்சிக்க வேண்டும் என்பதால், வீட்டில் பூந்தொட்டி வைத்துகூட துளசியை வளர்த்து அவ்வப்போது சாப்பிடலாம்.
துளசியையும் சாப்பிட்டு, மனதையும் கட்டுக்குள் வைத்து நாம் முயற்சித்தால் கட்டாயம் வெற்றி நிச்சயம்.
பின்குறிப்பு: ஒரேநாளில் சிகிரெட்டை நிறுத்துகிறேன் என அளவுக்கு அதிகமான துளசியை சாப்பிடுவது கேடானது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
புகை மரணத்திற்கு வழிவகை செய்யும்..