96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
போதையில் செக்ஸ் வைத்துக்கொள்ளும் பழக்கம் உடையவரா நீங்கள்?.. உடனே கைவிடுங்கள்.. ரொம்ப ஆபத்தாம்.!
இன்றளவில் உள்ள தம்பதியிடையே ஆல்கஹால் அருந்திவிட்டு உடலுறவு மேற்கொண்டால், அந்த விஷயத்தில் நன்றாக ஈடுபடலாமென்ற நம்பிக்கை இருக்கிறது. இதில் சேக்ஷ்பியரின் கூற்றுப்படி பாதி உண்மை; மீதி செக்ஸ் மீதான ஆர்வத்தை குறைக்கும் என்பதே நிதர்சனம்.
மதுபானம் அருந்துவதன் காரணமாக மனத்தடை குறைக்கும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை என்றாலும், அவை ஏற்படும் பொறுமையான பாதிப்பு வாழ்நாட்கள் முழுவதும் நீடித்து இருக்க கூடியது. இவை மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்திறனை அறவே கட்டுப்படுத்தும் குணம் கொண்டவை ஆகும்.
இதனால் மதுபானம் அருந்திவிட்டு உடலுறவு கொண்டால், நேரத்தின் மீதான கவனம் என்பது பெரும்பாலும் இருக்காது. இது அதிக நேரம் உடலுறவு கொண்ட உணர்வை ஏற்படுத்தும். ஆனால், அவை உண்மையான நேரம் இல்லை. மது அருந்திவிட்டு உடலுறவு வைப்பவர்கள் இதனை கண்டுகொள்ளாமல், மது அருந்தினால் கூடுதல் சக்தி கிடைக்கும் என எண்ணி செயல்பட்டால் நிதர்சனத்தில் ஏமாற்றமே மிஞ்சும்.
மதுபானத்தை தொடர்ந்து அருந்துவது கல்லீரல் பிரச்சனைக்கும் வழிவகை செய்யும். ஆணின் செக்ஸ் ஹார்மோன் சுரப்பை கல்லீரல் மட்டுமே பக்குவப்படுத்தி உடலுக்கு அனுப்பும். கல்லீரல் பாதிக்கப்பட்டால் அதன் வேலைகளை செய்ய இயலாது. இதனால் ஆணுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு, பெண்ணுக்கு செக்ஸ் ஆர்வம் குறைவது போன்றவை ஏற்படும்.
அதேபோல், தாம்பத்தியத்தில் தம்பதிகளின் மனதும், உடலும் ஒருசேர இணைய வேண்டும். அவையே இருவரையும் உச்சக்கட்டத்திற்கு அழைத்து செல்ல உதவும். மாறாக இருவரும் மதுபானம் அருந்திவிட்டு, எதோ ஒரு துணை போதையில் ஆர்வமிகுதியில் விபரீதமான செயல்களை முன்னெடுத்தால் அங்கு உயிரிழப்பு கூட ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை தம்பதிகளே..
மது நாட்டிற்கும், வீட்டிற்கும், உடல் நலத்திற்கும் கேடு தரும்.. உயிரை கொல்லும்..!!