சர்க்கரை வியாதி உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா?.. மருத்துவர்கள் கூறுவது இதுதான்.!



Diabetes Patients to Eat Egg

 

நீரிழிவு நோயாளிகளுக்கு முட்டை மிகசிறந்த உணவாகும். அதனுள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் கார்போஹைட்ரேட் குறைந்தளவு உள்ளது. 

முட்டையில் இருக்கும் புரோடீன் செரிமானத்தை தாமதப்படுத்தி, சாப்பிட்டதும் சர்க்கரை அளவு உயராமல் பார்த்துக்கொள்ளும். வைட்டமின் ஏ, டி, ஈ, கே, பி12 போன்றவை தசை மற்றும் நரம்புகளுக்கு முக்கியம். 

health tips

இவற்றில் பொட்டாசியம், தோலுக்கு தேவையான வைட்டமின், மூளை வளர்ச்சிக்கான கோலின் போன்றவையும் நிறைந்து காணப்படுகிறது. முட்டையில் இருக்கும் 75 கலோரியில் 15 வெள்ளைப்பகுதியிலும் 60 மஞ்சள் கருவிலும் இருக்கின்றன.

நீரழிவு நோயாளிகள் முட்டையை வாரத்திற்கு மூன்று அல்லது நனவு நாட்கள் சாப்பிடலாம். வெள்ளிப்பகுதியை மட்டும் சாப்பிட்டால் நாளொன்றுக்கு 2 முதல் 3 முட்டை சாப்பிடலாம். முட்டையில் இருக்கும் அமினோ அமிலம், புரதம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.