Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
அடிக்கடி நகம் கடிக்கிறீர்களா.? இது உங்களுக்கு தான்.! கொஞ்சம் உஷாரா இருங்க.!
பெரும்பாலானவர்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கின்றது. இதற்கு குழந்தைகள் பெரியவர்கள் என்ற வித்தியாசமே கிடையாது. சிலர் பொழுதுபோக்குக்காக நகம் கடிக்க, சிலரோ கோபம் பதற்றம் உள்ளிட்டவற்றின் போது நகம் கடிப்பார்கள். இந்த பழக்கம் மிக மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை.
அடிக்கடி நகம் கடிப்பதால் பாக்டீரியா தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. இது இரப்பை குடலில் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். வாய் வழியாக செல்லும் இந்தத் தொற்று குடல்புழு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சிலர் நகத்தை கடித்து கடித்து அருகில் இருக்கும் சதை பகுதியையும் சேர்த்து கடிப்பார்கள்.. இதனால் ரத்தம் வந்து அந்த இடத்தில் நோய் தொற்று அதிகரிக்கும். அதே தோற்றான கைகளுடன் நாம் சாப்பிடும் போது அது உள்ளே சென்று பாதிப்பை ஏற்படுத்தும்.
இப்படிப்பட்ட பழக்கத்திலிருந்து விடுபட என்ன செய்யலாம்?
கடிக்க முடியாத அளவிற்கு நகங்களை அடிக்கடி வெட்டி விட வேண்டும். கோபமாக, பதட்டமாக வரும்போது நகம் கடிக்கிறீர்கள் என்றால், அதை கவனித்து அந்த நேரத்தில் மனதை திசை திருப்ப வேறு ஏதாவது முயற்சி செய்யலாம்.
அதாவது ஸ்ட்ரெஸ் பால் உபயோகிப்பது, பிடித்த பாடல்கள் அல்லது வீடியோக்களை கேட்பது, சிறிது தூரம் நடை பயிற்சி மேற்கொள்வது உள்ளிட்டவை இந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ள உதவும்.