வீட்டுக்குள்ள அடிதடி, வெளிய கொண்டாட்ட கும்மியடி.. இது பிக் பாஸ் தோழர்கள் சங்கம்.! வைரல் வீடியோ இதோ.!
கோமியம் குடிப்பவர்களுக்கு பெரும் ஆபத்து.. உயிரே போகும் அபாயம்..! பதறவைக்கும் ஆய்வு முடிவுகள் இதோ..!!
மாட்டின் கோமியம் மருத்துவ மிகுந்தது என்று கூறும் நபர்களுக்கு இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வின் முடிவுகளில் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. கால்நடையின் சிறுநீரில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா இருக்கிறது என்றும், அது குடிப்பதற்கு உகந்ததல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாஹிவால், தர்பர்கார் மற்றும் விந்தவாணி போன்ற மூன்று வகையான மாடுகள் மற்றும் எருமைகளில் சிறுநீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அதில் பாக்டீரியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் நோய்க்கிருமி பாக்டீரியாக்கள் இருக்கின்றன என்றும் தெரியவந்துள்ளது.
கோமியம் மனிதன் குடிப்பதற்கு உகந்ததல்ல என்று உலகளவிலான பல ஆய்வுகள் இருக்கும் போதிலும், கோமியத்தை குடிப்பதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஒரு ஆய்வில், நைஜீரியாவில் பலருக்கும் ஏற்பட்ட வலிப்பு ஏற்பட்டதுக்கான காரணம் நச்சுத்தன்மை நிறைந்த கோமியத்தை உட்கொண்டதே என விளக்கியுள்ளது. அத்துடன் குழந்தைகளிடையே மரணத்தைக்கூட விளைவிக்கும் என்றும் எச்சரித்திருக்கிறது.