தினமும் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவிங்களா?.. இனி அப்படி பண்ணாதீங்க..! இதயநோய் வருமாம்..!!
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றாலும், காலையில் எழுந்த பின்னர் வெறும் வயிற்றில் அதனை உட்கொள்வது நல்லது கிடையாது. வாழைப்பழத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கும்.
இதில் அமிலத்தன்மை இருப்பதால் குடல் இயக்கம் பாதிக்கப்பட்டு சர்க்கரையும், அமிலதன்மையும் இணைந்து குடலுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். காலைவேளையில் வாழைப்பழம் சாப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
சாப்பிட்ட பின்னர் வாழைப்பழம் சாப்பிட்டால் சிறப்பானது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் இயற்கையாகவே அதிகளவில் உள்ளது. பிற பழங்களுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டால் அதிலிருக்கும் வீரியமானது குறையும்.
வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடும் பட்சத்தில் அதிலிருக்கும் மெக்னீசியம் ரத்தத்தில் கலக்கும். இதனால் ரத்தத்தில் சமநிலையின்மை ஏற்பட்டு அதன் தாக்கம் இதயத்தில் ஏற்படும். இதனால் இதய ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகி இதயநோய் ஏற்படும்.
ஆயுர்வேத குறிப்பின்படி வெறும் வயிற்றில் வாழைப்பழம் மட்டுமல்ல, எந்த பழத்தையும் சாப்பிடக்கூடாது. பழங்கள் விளைவிப்பதற்கு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால் பழத்தில் இருக்கும் ரசாயனங்கள் வயிற்றுக்கு நேரடியாக சென்று பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு குணாதிசயத்தை கொண்டுள்ளது என்பதை அறிந்து அதற்கேற்றார்போல நாம் சாப்பிட வேண்டும். பழங்களை சரியான அளவில், சரியான நேரத்தில் சாப்பிடுவதால் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக பெறலாம்.