53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
குழந்தைக்கு இரத்த சர்க்கரை நோய் இருக்கா?.. அறிகுறிகளை தெரிஞ்சிக்கோங்க பெற்றோர்களே.. கவனமாக பாருங்க.!
இன்றளவில் இரத்த சர்க்கரை நோய் என்பது வயதானவர்களுக்கு ஏற்படும் என்ற கருத்துக்களானது மாறி, உணவு பழக்க வழக்கம் மற்றும் மேலைநாட்டு கலாச்சார மோகத்தின் ஆதிக்கத்தால் இளைஞர்களுக்கும், சிறுவயது குழந்தைகளுக்கும் இரத்த சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்த சர்க்கரை நோய் என்பது வெளிப்படையாக தெரியாது. ஏனெனில் பெரியவர்கள் தங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளை கூறி, அதற்கான மருத்துவ சிகிச்சைகளை பெறுவார்கள். அதனால் சோதனையில் இரத்த சர்க்கரை இருந்தாலும் தெரிந்துவிடும்.
குழந்தைகளுக்கு முதலில் அறிகுறிகளை கூற வாய்ப்பில்லை. மாறாக இரத்த பரிசோதனை வாயிலாக மட்டுமே அதனை அறிய முடியும். முதலில் நமது குழந்தைக்கு இரத்த சர்க்கரை ஏற்பட்டுள்ளதா? என்பதை பெற்றோர் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறான குழந்தைகள் குழப்பமான மனநிலையோடு இருப்பார்கள். குழந்தையின் பேச்சில் குழறுவது ஏற்படும். நடத்தையில் மாற்றம் வரும். அதிக பசி, வியர்வை, படபடப்பு போன்றவைகளுக்கு குழந்தை உள்ளாகும். நாக்கு உலர்ந்து, உடல் நடுங்கும்.
குடிபோதையில் இருக்கும் நபரை போன்ற செயல்பாடுகள் குழந்தை இரத்த சர்க்கரையால் பாதிக்கப்பட்டு இருந்தால் தோன்றும். இவ்வாறாக குழந்தைகள் மயங்கினால், அவர்களுக்கு வலிப்பு வரவும் வாய்ப்புள்ளது.
இரத்த சர்க்கரையின் அளவு குறைவோருக்கு மயக்கம் வந்தால், அவர்களுக்கு இனிப்பு வழங்கினால் மயக்கம் தெளியும். பிற ஆபத்து குறையும். இதனால் குழந்தைகளுக்கு குளுக்கோஸ் பவுடர் போன்றவற்றை நாக்கு, ஈறு, முன்புற தொண்டியில் தடவுவதால் மயக்கம் தெளியும். முதலுதவி சிகிச்சை அளித்ததும் மருத்துவரிடம் குழந்தையை அழைத்து செல்வது நல்லது.