உங்களின் கை நகம் எந்த நிறத்தில் இருக்கிறது?.. கட்டாயம் இந்த பிரச்சனையாக இருக்கலாம் உஷார்..! ஆரோக்கியத்தை கண்டறிய அசத்தல் டிப்ஸ்.!



Finger Nail use to Find your body health 

 

பொதுவாக அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அதேபோல, நமது உடலின் ஆரோக்கியம் நகங்களில் வெளிப்படும். நகங்களில் மாறுதலடையும் நிறத்தை வைத்தே நமது உடல்நலனை யூகித்துவிடலாம்.

நாம் சிறுகுழந்தையாக இருக்கும்போது மருத்துவமனைக்கு உடல்நலம் சரியில்லாமல் சென்றால், மருத்துவர் நம்மை சோதித்துவிட்டு கைகளை பிடித்தும் நகங்களை உற்றுநோக்கி இருப்பார். நமது உடல் சத்து குறைபாடு அதிகமாக இருக்கும் பட்சத்தில், அவை நகத்தில் எதிரொலித்து மருத்துவர் அதற்கு தேவையான மருந்துகளை வழங்குவார். 

இயல்பாக ரோஸ் நிறத்தில் இருக்கும் விறல் நகம் வெளிறிய வெள்ளி நிறத்தில் இருந்தால் உடலில் இரும்புசத்து, வைட்டமின் குறைவு என்பது பொருள். கருஞ்சிவப்பு நிறத்தில் நகம் இருந்தால் அதிக கொழுப்பு என பொருள். அதேபோல அமில வெளிப்பாட்டையும் அது குறைக்கும். அதாவது, ஈரலின் செயல்திறன் குறைவை உணர்த்துகிறது. 

ஊதா சிவப்பு நிறத்தில் நகங்கள் காணப்பட்டால் செரிமான குறைபாடு, இரத்தத்தில் அதிகரிக்கும் ஆல்கஹால் அளவு ஆகியவற்றை குறிக்கும். மஞ்சள் நிறத்துடன் இருக்கும் நகம் தைராய்டு மற்றும் நுரையீரல் பிரச்சனைகளை உணர்த்தும். 

health tips

நகம் மற்றும் உதடு இளநீல நிறத்தில் இருப்பது இரத்தத்தில் ஆக்சிஜன் குறைபாட்டினை உணர்த்தும். சாக்லேட், ஆல்கஹால் போன்றவற்றில் இருக்கும் சர்க்கரை நகத்தின் வெண்புள்ளியை உருவாக்கும். நகத்தை சுற்றிலும் உள்ள சதையில் வலி, அரிப்பு இருந்தால் உடல் ஒவ்வாமை காரணமாக பாதிக்கிறது என அர்த்தம். 

நகத்திற்குள் இருக்கும் மெல்லிய சிவந்த கொடு இதய வால்வுகள் சிதைவு, இரத்த அழுத்தம் போன்றவற்றை உணர்த்தும். நகத்தை நாம் பராமரிக்க புதினா இலை எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம். இதனால் நகத்தை சுற்றிலும் இருக்கும் வெக்கம் குறையும். 

இளம் சூடுள்ள நீரில் துளசி, புதினா சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவைத்து பின் இளம் சூட்டில் நகங்கள் மூழ்க வைத்தால் நகம் சுத்தமாகும். உடலுக்கு தேவையான அளவு நீர் குடிப்பது நகத்தின் நலனை அதிகரிக்கும்.