திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
முட்டையின் மஞ்சள் கரு ஆபத்தானதா.? அதில் இருக்கும் நன்மைகள் என்ன.?
முட்டையின் மஞ்சள் கரு உடலுக்கு ஆரோக்கியம் ஆனதா.? இல்லையா.? என்பது நீண்ட கால விவாதம் ஆகும். முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள அதிக அளவு கொலஸ்ட்ரால் அவற்றை ஆரோக்கியமற்றதாக ஆக்குகிறது என்று பலர் நம்புகிறார்கள், இது மஞ்சள் கருவை நிராகரிக்க வழிவகுக்கிறது.
இதனால், கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதால், சிலர் முட்டையை உணவில் சேர்க்கத் தயங்குகின்றனர்.எனினும் இந்த செய்தி முழுக்க பொய் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உண்மையில் முட்டையின் மஞ்சள் கருக்கள் சிறந்த சத்தான உணவு ஆகும். இதனை நாம் தவிர்க்காமல் நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது கண்பார்வைக்கு நன்மை பயக்கும். முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. 100 கிராம் முட்டையில் 1,442 IU வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ போதுமான அளவு உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
முட்டையில் லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் உள்ளன. இவை ஆக்ஸிஜனேற்றிகள் முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், நல்ல கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தவும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.