பன்றி காய்ச்சலில் இருந்து எப்படி தப்பிப்பது? கண்டிப்பாக இதனை கடைபிடியுங்கள்!



how to avoid Swine Flu


பன்றிக்காயச்சல் ஏற்படக் காரணமான வைரஸ் உள்ளவற்றை தொட்டால் இந்த வைரஸ் தொற்று உண்டாகிறது. இந்தக் காய்ச்சல் உள்ளவர்கள் இருமினாலோ, தும்மினாலோ தெறிக்கும் எச்சில் மூலம் மற்றவர்களுக்கும் பரவுகிறது. 

65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 வயதுக்கும் குறைவானவர்கள், ஆஸ்த்மா, நுரையீரல், இதயம், சிறுநீரக நோய் உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் போன்றவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட நேரிடும். 

swine flu

தொடர்ச்சியாக காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டைப் புண், இருமல், பசியின்மை, சோம்பல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளாகும். 

விரலிடுக்குகளிலும் நன்றாக சோப்பு போட்டு தேய்த்து கைகளை கழுவும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். 

தும்மும்போதும் இருமும்போதும் கைக்குட்டையால் மூக்கு, வாயை மூடிக்கொள்ளுதல் வேண்டும். தினமும் நன்கு தூங்கவேண்டும். நீர்ச்சத்து குறையாமல் இருக்க தண்ணீரும் மற்றும் திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். 

பன்றிக்காயச்சல் அறிகுறிகள் இருப்பவர்கள் வெளியிடஙகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பிறரைத் தொடுவதையும் முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும். காய்ச்சல் வந்தால் மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் சுயமாக மருத்து எடுத்துக்கொள்ளக் கூடாது.