திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அச்சச்சோ.. டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்தினால் இவ்வுளவு ஆபத்தா?.. தவிர்க்க என்ன செய்யலாம்?.. அசத்தல் வழிமுறைகள் இதோ.!
இன்றைய காலகட்டத்தில் தினமும் காலையில் எழுந்ததும் செல்போன் முகத்தில் விழிப்பதையே பலரும் வழக்கமாக வைத்துள்ளோம். சில நேரங்களில் செல்போனை கையில் எடுத்து ஆன் செய்த பின்னே கண்களையே திறக்கிறோம்.
ஒரு நிமிடம் கூட செல்போன் இல்லாமல் இருக்க இயலவில்லை. பாத்ரூமுக்கு செல்லும் போதும் கையில் செல்போனை கொண்டு செல்கிறோம். ஆனால் உலகிலேயே அதிக கிருமியுள்ள இடம் என்றால், அது கழிப்பறை தான்.
அங்கு செல்போனை கொண்டு செல்வதால் பாக்டீரியா நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்த ஆய்வு சமீபத்தில் நடைபெற்ற நிலையில், பாக்டீரியாக்கள் நோய் தொற்றுகள் தாக்குவதை சுலபமாக்குகிறது.
கழிப்பறைக்கு செல்போன் கொண்டு செல்லும் பழக்கம் மிகவும் ஆபத்தானது என்று ஆய்வு மேற்கொண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கழிப்பறையில் செல்போன் பயன்படுத்துவதால் கழிப்பறை இருக்கையில் இருக்கும் நோய் தொற்று கிருமிகள் அனைத்தும் செல்போனில் தொற்றிக் கொள்கிறது.
கழிப்பறையில் செல்போன் பயன்படுத்துவதால் கீழ்க்கண்ட பாதிப்புகள் உண்டாகிறது:
கழிப்பறையில் செல்போன் பயன்படுத்துவதால் கிராஸ் கண்டாமினேஷன் என்ற செயல்முறை மூலம் நோய்க்கிருமிகள் பரவுகிறது.
வெகு நேரம் கழிப்பறையில் இருப்பதால், அங்கு செல்போன் பார்ப்பதால் நோய்க்கிருமிகள் செல்போனில் சேர்ந்து வாய், கண், மூக்கு வழியாக உடலுக்கு சென்று பாதிப்புகளை ஏற்படுத்தும்.
பல தீங்குகளை விளைவிக்கும். இதனால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, நோய் தொற்றுகள், குடல் பிரச்சனைகள், சுவாச பிரச்சனைகள், சிறுநீர் பாதை தொற்று போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.
இதனை தடுக்க என்ன செய்யலாம்?:
எவ்வளவு பெரிய முக்கியமான விஷயமாக இருந்தாலும், கழிப்பறைக்கு செல்போன் எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
செல்போன் மட்டுமல்லாமல் டேப்லெட், இயர் ஹெட்ஃபோன் உள்ளிட்ட எந்த ஒரு டெக்னாலஜி சார்ந்த பொருட்களையும் கழிவறைகள் எடுத்துச் செல்லக்கூடாது.
சிலர் கழிப்பறையில் புத்தகம் படிக்கும் பழக்கத்தையும் கொண்டிருப்பார், அந்த பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.
கழிப்பறையில் செல்போனை தவிர்ப்பது ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், உடல் ஆரோக்கியத்தை மனதில் வைத்து இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.