இரத்தசோகையால் சோர்வு, உடல்நல பிரச்சனையா?.. என்ன செய்யலாம்.. அசத்தல் டிப்ஸ்.!



How to Cure Anemia Tamil Tips

உலகளவில் பெண்களுக்கு அதிகமாக இரத்தசோகை பிரச்சனை ஏற்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவை பொறுத்த வரையில் இரத்தசோகை என்பது பொது சுகாதார பிரச்சனையாக உள்ளது. திருமண வயதில் இருக்கும் பெண்களில் 52 % பெண்கள் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இரத்த சோகைக்கு முதல் காரணமாக இருப்பது இரும்புசத்து குறைபாடு ஆகும். 

அறிகுறிகள்: 

அதிகளவு சோர்வு, பலவீனம், தோல் வெளிறுதல், மார்பு வலி, இதயத்துடிப்பின் வேகம் அதிகரித்தல், மூச்சுத்திணறல், தலைவலி & தலைசுற்றல், கை-கால்களில் குளிர்ந்த உணர்வு, நாக்கில் புண், நாக்கு வீக்கம், பலமில்லாத நகங்கள், பசியின்மை போன்ற பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவர்கள் உடலை பரிசோதனை செய்து மருந்து வழங்கினால் அதனை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனைப்போல, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

Anemia

இரத்தசோகை தவிர்க்கும் வழிமுறைகள்: 

தினம் கட்டாயம் இரும்புசத்துக்கொண்ட உணவுகளை சாப்பிடுவதால் இரத்தசோகை பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம். இறைச்சி, கடல் உணவுகள், பீன்ஸ், அடர்ந்த பச்சை நிறத்தில் இருக்கும் காய்கறிகள், கீரைகள், திராட்சைப்பழம் போன்றவற்றை சாப்பிடலாம். 

இறைச்சியை விரும்பாத நபராக இருந்தால் காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடலாம். ஆரஞ்சு பழசாறுகளில் இருக்கும் வைட்டமின் சி, உணவில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்ச உதவி செய்யும். தினமும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் எந்த பிரச்சனையும் நம்மை நெருங்காது.