குறட்டையை இயற்கையான முறையில் சரி செய்ய இவ்வுளவு விஷயங்கள் இருக்கிறதா?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!



How to Cure Snoring Kurattai Naturally Tamil Tips

 

நாம் தூங்கும் போது நமது மூச்சு தொண்டை பகுதியில் உள்ள மெல்லிய தளர்வு திசைகளின் வழியாக செல்லும்போது ஏற்படும் அதிர்வு ஒலி குறட்டை என்று அழைக்கப்படுகிறது. இது இயற்கையானது என்றாலும் பலருக்கும் பெரும் பிரச்சனையாகவும் இருந்து வருகிறது. 

அதேபோல சில நேரத்தில் தீவிர உடல் நலக்குறைவின் அறிகுறியாகவும் இது காணப்படுகிறது. அதிகப்படியாக உடல் எடை குறைதல், மதுப்பழக்கத்தை தவிர்த்தல், பக்கவாட்டு நிலையில் படுத்து உறங்குதல், உயரமான தலையணை பயன்படுத்தாமல் இருத்தல் போன்றவை மூலமாக குறட்டையை நிறுத்தலாம். 

இதில் குறட்டைக்கு முக்கியமானதாக கூறப்படுவது மூக்கடைப்பு. இதனால் மூச்சு திணறல் ஏற்படும். இதனை சரி செய்ய பாத்திரத்தில் கொதிக்கும் நீரை எடுத்து, அதில் வரும் நீராவியை 10 நிமிடங்களுக்கு மூக்கு வழியாக பொறுமையுடன் சுவாசித்து பின்படுக்கைக்கு சென்றால் மூக்கு அடைப்பு நீங்கிவிடும். 

health tips

செரிமான பிரச்சனையால் ஏற்படும் குறட்டையை சரி செய்ய புதினா மற்றும் வெந்தயம் சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. வெந்தயத்தை நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து, அதனை உறங்கு முன் சாப்பிட்டு உறங்கலாம். தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து படுக்கைக்கு செல்லும் முன் சாப்பிட்டு உறங்கினால் குறட்டை தடுக்கப்படும். 

பூண்டு பல மருத்துவங்கள்-மருத்துவ குணங்கள் கொண்டது என்பது நமக்கு அறிந்த ஒன்று. அவை சுவாச மண்டலத்தை சுத்தப்படுத்தி நாசி பாதையில் இருக்கும் சளியை குறைக்கும். இதனால் இரண்டு அல்லது மூன்று பற்கள் பூண்டை வெறுமென என்று விழுங்கினால் குறட்டை நிற்கும்.