"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
பளிச்சென.. மின்னல் போன்ற வெண்ணிற முத்துப்பற்களை பெற என்ன செய்யலாம்?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
ஒவ்வொரு மனிதரும் தனது புறத்தோற்ற அழகை மேம்படுத்த விரும்புவதை போல, பற்களின் அழகையும், அதன் ஆரோக்கியத்தையும் அலங்கரிக்க நினைப்பதுண்டு. பற்கள் வாயின் ஆரோக்கியத்திற்கான அடையாளம் மட்டுமல்லாது, உடல் தோற்றத்திற்கும் அழகு சேர்க்கும். வயது அதிகரிக்கும் போது பற்களின் நிறம் மாறுவது இயல்பு.
ஆனால், இன்றோ குட்கா, சிகிரெட், மதுபானம், காபி மற்றும் தேநீர் குடித்துக்கொண்டு இருப்பது போன்ற காரணத்தால் பற்களின் நிறம் மாறுகிறது. பற்களை அழகுபடுத்த சில எளிய முறைகளை கடைபிடித்தாலே போதுமானது. அதுகுறித்து இன்று காணலாம்.
ஆப்பிள் வினிகர்:
ஆப்பிள் சீடர் வினிகர் என்பது கூந்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் பொருள் ஆகும். இதனை பற்களை வெண்மையாக்கவும் உபயோகம் செய்யலாம். 200 மில்லி அளவுள்ள நீரில், 2 ஸ்பூன் ஆப்பிள் வினிகர் சேர்த்து வாயில் ஊற்றி 30 வினாடி நன்றாக கொப்புளித்து அதனை துப்ப வேண்டும். ஆப்பிள் வினிகர் பிளீச்சிங் தன்மை கொண்டது என்பதால் 20 - 30 நொடிக்கு மேல் அதனை வாய்க்குள் வைத்திருக்க வேண்டாம்.
பழங்களின் தோல்கள்:
ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் வாழைப்பழம் போன்ற பழத்தோல்களில் இருக்கும் வைட்டமின் சி, டி-லிமோனின் கலவை பற்களை இயற்கையாகவே வெண்மையாக்கும் தன்மை கொண்டது ஆகும். மேற்கூறிய பழங்களின் தோள்களை சாதாரணமாக பற்களை துலக்குவது போல துலக்கி வாயை கொப்புளிக்கலாம்.
எண்ணெய்:
வாயில் எண்ணெயை ஊற்றி கொப்புளிப்பதால், ஆயில் புல்லிங் முறையில் பற்களுக்கு நன்மை கிடைக்கிறது. தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி கொப்புளித்தால், பற்களில் மஞ்சள் நிறம் ஏற்பட காரணமாக இருக்கும் பிளேக் கட்டிகளை நீக்க வழிவகை செய்யும்.
சமையல் சோடா:
பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை அகற்ற சமையல் சோடா உபயோகம் செய்யலாம். இதனை அதிகளவில் உபயோகம் செய்ய கூடாது. அது பற்களின் ஆரோக்கியத்திற்கு எமனாமாகவும் வாய்ப்புள்ளது. பேக்கிங் சோடா பாக்டீரியாவை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது ஆகும்.
சுகாதாரம்:
மஞ்சள் கறைகள் பற்களில் ஏற்படாமல் இருக்க, நமது பற்களை நாமே சுகாதாரமாக பாதுகாக்க வேண்டும். தினமும் பற்கள் துலக்குதல், சிகிரெட் போன்ற உடலை சீரழிக்கும் பழக்கத்தை கைவிடுதல் போன்றவை மூலமாக பற்களில் ஏற்படும் மஞ்சள் நிறத்தை மாற்றலாம்.