மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வயிற்றுப்போக்கு, தொண்டை வலியை குணப்படுத்தும் கொள்ளு துவையல்.. இல்லத்தரசிகளே இன்றே செய்து அசத்துங்கள்..!!
வயிற்றுப்போக்கு, ஆஸ்துமாவை சரிசெய்யும் கொள்ளு துவையல் எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
வயிற்றுப்போக்கு, கண் நோய்கள் உள்ளிட்டவற்றை குணப்படுத்த கொள்ளு பயன்படுகிறது. பசியை தூண்டுவதிலும், உடல் உறுப்புகளை பலப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. நம் உணவில் அடிக்கடி கொள்ளு சேர்ப்பதன் மூலம் தொண்டை வலி, ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகளை சரிசெய்ய இயலும்.
தேவையான பொருட்கள் :
தேங்காய் - கால் மூடி
சிவப்பு மிளகாய் - ஏழு
உப்பு - தேவைக்கேற்ப
பூண்டு - ஆறு பல்
கொள்ளு - ஒரு கைப்பிடி
செய்முறை :
★முதலில் தேங்காயை நன்கு துருவி வைத்துக் கொள்ளவும்.
★பின் அடிகனமான பாத்திரத்தில் கொள்ளினை சேர்த்து அடுப்பினை இளம் தீயில் வைத்து நன்கு வறுக்க வேண்டும்.
★அடுத்து கொள்ளு, தேங்காய் துருவல், உப்பு, சிவப்பு மிளகாய், பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நீர் விட்டு அரைக்க வேண்டும்.
★பின் ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து அரைத்த கலவையில் சேர்த்தால் சுவையான கொள்ளு துவையல் தயாராகிவிடும்.