தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
பல சத்துக்கள் நிறைந்த கேழ்வரகு தட்டை.. இல்லத்தரசிகளே இன்றே செய்து அசத்துங்கள்..!!
கேழ்வரகில் பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இன்று கேழ்வரகு தட்டை எப்படி செய்வது என்று காணலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு - அரை கிலோ
கடலைப்பருப்பு - 50 கிராம்
வறுத்த உளுந்து - 50 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
★முதலில் கேழ்வரகை நன்கு அரைத்து மாவாக்கிகொள்ள வேண்டும். இந்த மாவுடன் வறுத்த உளுந்து சேர்த்து நன்கு அரைக்கவும்.
★அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் உப்பு, மிளகாய்தூள், கடலைப்பருப்பு போட்டு கெட்டியாக பிசைந்துகொள்ள வேண்டும்.
★பின் மாவை சிறிதளவு உருண்டையாக உருட்டி, வாழையிலையில் போட்டு மெல்லியதாக தட்டிக்கொள்ள வேண்டும்.
★அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மிதமான தீயில் தட்டி வைத்துள்ள தட்டைகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்தெடுக்கவும்.
★அவ்வளவுதான் கேழ்வரகு தட்டுவடை நிமிடங்களில் தயாராகிவிடும்.