3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
உங்களுக்கு சிறுநீரக கல் பிரச்சினை உள்ளதா? இந்த உணவை எல்லாம் தொடவே கூடாது?
மனிதனுக்கு ஒவ்வொரு நோய்க்கும் அதற்கு ஏற்றவாறு உணவு பழக்கவழக்கங்களை மேற்கொண்டு வந்தால் அந்த பிரச்சனையில் இருந்து எளிதாக குணமாகி விடலாம். அந்த வகையில் சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.
மனித உடலில் தாதுக்கள் அதிகளவில் சேரும்போது சிறுநீரகத்தில் கல் படிந்து சிறுநீரக கற்களாக மாறுகிறது. எனவே, சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் பாதாம், முந்திரி, பிஸ்தா, திராட்சை, வேர்க்கடலை, போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.
அதேபோல் சர்க்கரை வள்ளி கிழங்கு மற்றும் இனிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக அதிக அளவு புரதச்சத்து உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
மேலும் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்ற அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக தக்காளியில் வைட்டமின் சி சக்தி அதிகமாக இருப்பதால் சிறுநீரக கல் பிரச்சனையை அதிகரிக்க செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுநீரக கற்கள் பிரச்சினை உள்ளவர்கள் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும். அப்போதுதான் சிறுநீர் கழிக்கும் போது கற்கள் அதன் வழியாக வெளியேறிவிடும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.