மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புற்று நோயை விரட்டும் பழைய சாதம்.. ஆய்வில் வெளிவந்த உண்மை.!
பழைய சாதத்தின் மேன்மை :
பழங்காலத்தில் பலருடைய முக்கிய உணவாக இருந்தது பழைய சாதம் தான். அதற்கு பச்சை மிளகாயை இணை உணவாக வைத்து சாப்பிடுவார்கள். சமீபத்திய ஆய்வு ஒன்றில் இந்த பழைய சாதம் சாப்பிடுவது புற்று நோயை தடுக்கும் என்று கூறப்படுகிறது.
பொதுவாக தற்போதைய காலகட்டத்தில் காலை உணவாக பலரும் தோசை, இட்லி, வடை, பொங்கல் போன்றவற்றை தான் சாப்பிடுகிறார்கள். ஆனால், இந்த பழைய சாதத்தில் நொதித்த அரிசி கஞ்சி தண்ணீரில் உயிரி மூலக்கூறுகள் அதிகம் இருப்பதால் உடல் செல்களின் எதிர்ப்பு தன்மையை இது அதிகப்படுத்துகிறது.
உடலுக்கு குளிர்ச்சி :
எனவே தான் காலை உணவில் பழைய சோறை சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பழைய சாதத்தில் இருக்கும் நுண்ணுயிரிகள் உடல் சுகாதாரத்தை பேணுகிறது.
இது பாரம்பரிய உணவாக பார்க்கப்படுகிறது.
வெயில் காலங்களில் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய இந்த பழைய சாதத்தை தற்போதைய காலகட்டத்தில் அடிக்கடி சாப்பிடுவது நல்லது மூலம் வெளியாகின்ற வளர்ச்சிதை மாற்ற வேதிப்பொருட்கள் ஆனது குடலில் இருக்கும் செல்களை வலிமைப்படுத்தி நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
புற்று நோயை தடுக்கிறது :
இதன் காரணமாக குடலில் அப்பழுக்குகள் எதுவும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதால் இது புற்றுநோய் பாதிப்பில் இருந்து நம்மை தடுக்கிறது.
இது மட்டுமல்லாமல் பழைய சாதத்தில் நன்மைகளை அதிகரிக்க அரிசி சாதத்தை வடித்த பின்னர் அதை மண் பானையில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து சாப்பிடுவது அதிகப்படியான நன்மைகளை உடலுக்கு தரும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.