சாப்பிட்டதும் சுடுநீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களா நீங்கள்?.. உங்களுத்தான் இந்த செய்தி.. எச்சரிக்கை.!



If You Drink Hot Water After Complete Food Tips

இன்றுள்ள பலரும் சாப்பிட்டதும் உணவு செரிக்க வேண்டும் அல்லது செரிமானம் ஆகவில்லை என்று கூறி சூடான நீர் அருந்தி வருகின்றனர். இது கட்டாயம் செரிமானத்திற்கு உதவும் என்றாலும், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பயங்கரமானது என்பதால் தேவையற்றது ஆகும். செரிமான மண்டலத்தில் உணவை செரிக்கவைக்கும் போது, சிறிதளவு வெப்பமானது ஏற்படுகிறது. 

கடினமான பொருளை சமைத்து மென்மையாக்கி, அதனை உணவாக முதலில் எடுத்துக்கொள்கிறோம். பின்னர், அதனை பற்களால் கடித்து சாப்பிட்டு, அதனை மேலும் மென்மையாக மாற்றி, உமிழ் நீர் மூலமாக நொதிகள் உருவாக்கப்பட்டு செரிமான வேலைகள் தொடங்குகிறது. 

செரிமான மண்டலத்திற்கு உணவு சென்றதும், அங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரந்து உணவினை எரிக்கிறது. உடலில் உற்பத்தியாகும் ஹைட்ரோகுளோரிக் அமிலம், அதனை எரிக்க மட்டும் உபயோகம் ஆகிறது. இதனாலேயே சரிவர சாப்பிடாமல் இருந்தால் அல்சர் மற்றும் வயிற்றுப்புண் பிரச்சனையும் ஏற்படுகிறது. உணவில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட சத்துக்கள், இரத்தத்தில் கலக்கப்படுகிறது. 

health tips

சாப்பாடு சாப்பிடும் போது உடலில் இயற்கையாக உருவாகும் வெப்பம் + சுடுநீர் செரிமானத்தின் வேகத்தை அதிகரிக்கும். உடலின் உறுப்புக்கள் வழக்கம்போல தந்து பணியை செய்ய, சுடுநீரால் ஏற்படும் மேல் வெப்பம் சேர்ந்து நொதிகளின் வேலையை குறைத்து பின்விளைவுகளை ஏற்படுத்தும். 

சுடுநீர் குடிக்க கூடாதா என்று கேள்வி எழுப்பினால், குறிப்பிட்ட அளவு சுடவைக்கப்பட்டு ஆறிய நீரினை குடிக்கலாம். இதனால் செரிமான மண்டலத்தில் உற்பத்தியாகும் அமிலம் நீர்த்துப்போகும் செயல் குறையும். ஒரு செயலை செய்வது தவறில்லை. அதனை நன்கு உணர்ந்து செயல்பட வேண்டும். 
 
மனிதனின் செரிமான மண்டலா அமைப்பை புரிந்துவைத்த முன்னோர்கள், பந்தியில் இனிப்பில் தொடங்கி கசப்பில் உணவுப்பட்டியலை நிறைவு செய்தனர். இனிப்பில் உமிழ்நீர் சுரக்கப்பட்டு செரிமானத்திற்கு உதவி, குளிர்ந்த நீரால் ஏற்படும் எண்ணெய் கொழுப்பு படிமத்தை கரைக்க படிப்படியான உணவு பட்டியல் வைக்கப்பட்டன.