அடக்கடவுளே.. தண்ணி குடிச்சா கூட ஆபத்தா.? மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கை விதிகள்.! 



if you drink water in this time its bad for health

உணவும், தண்ணீரும் உயிர் வாழ மிக முக்கியமான விஷயங்களாகும். ஆனால், இவை மனித உடலுக்கு ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளும் போது பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. 

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தண்ணீர் பெரிய அளவில் பங்காற்றுகிறது. ஆனால், அப்படிப்பட்ட தண்ணீரை ஒரு சில நேரங்களில் குடிப்பது உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்தவும் வழிவகை செய்யும் என்பது உங்களுக்கு தெரியுமா? அவற்றை தெரிந்து கொள்வோம் வாங்க.! 

water

காபி, டீ உள்ளிட்ட சூடான பானங்களை சாப்பிட்ட பின்னர் நாம் தண்ணீர் குடிக்க கூடாது. இவ்வாறு தண்ணீர் குடிக்கும் போது வாயு, அமிலத்தன்மை, எடை உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். அதுபோல குளிர்ச்சியான பானங்களை சாப்பிட்ட பின்னரும் தண்ணீரை குடிக்க சற்று இடைவெளி விடுவது நல்லது. 

பழங்களில் சிட்ரிக் அமிலம் மற்றும் சர்க்கரை அதிக அளவில் இருக்கிறது. எனவே, பழங்களை சாப்பிட்ட 45 நிமிடங்களுக்கு தண்ணீர் குடிக்க கூடாது. ஐஸ்கிரீம் போன்ற குளிர்ந்த உணவை சாப்பிட்ட பின் 15 நிமிடங்கள் கழித்து தண்ணீர் அருந்தலாம். சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதால் தொண்டை வலி, இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் உடலில் ஏற்படக்கூடும். 

water

வேர்க்கடலை இனிப்பு உள்ளிட்டவை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கக்கூடாது. இனிப்பு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் ரத்த சர்க்கரை அளவை அதிகரித்து சர்க்கரை நோய்க்கு வழிவகை செய்யும். 

அதுபோல மூன்று வேளை உணவை சாப்பிடும் போது 45 நிமிடங்களுக்கு முன்பாகவும், சாப்பிட்ட 45 நிமிடங்களுக்கு பின்னரும் தண்ணீர் குடிக்க கூடாது. இது செரிமானத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்