பொங்கல் பானையில் கட்டும், பசுமஞ்சளை இப்படியும் பயன்படுத்தலாமா.? ஆச்சரிய தகவல்.!
தைத்திருநாளன்று நாம் பொங்கல் வைக்கும் பானையில், பார்ப்பதற்கு இஞ்சியை ஒத்திருக்கும் பசுமஞ்சளை கட்டுவதுண்டு. அந்த பசுமஞ்சள் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியது என்பதை அறிந்திருக்கிறோமா?
hsCRP (High-sensitivity C-reactive protein) என்னும் டெஸ்ட் உடலில் உள்ள முக்கிய ரத்தக்குழாய்களில் உள்ள உள்காயங்களை அறிவதற்காக பயன்படுகிறது. மாவுச்சத்து அதிகம் நிறைந்த உணவு பழக்கத்தை மேற்கொள்பவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் இது அதிகமாக இருக்கக்கூடும்.
இப்படி இரத்த குழாயில் ஏற்பட்டுள்ள சேதங்கள் நாளடைவில் கொழுப்பை அந்த இடத்தில் சேர்க்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் எளிதில் உருவாகின்றன. உடல் பருமன், தொப்பை, நீரிழிவு, கொழுப்புக் கல்லீரல் நோய், PCOD போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு ரத்தக்குழாய்கள் சேதம் அடையும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதனால் hsCRP அதிகரிக்கிறது. இதற்கு ஒரே நிவாரணி பசுமஞ்சளே ஆகும்.
ஒரு விரல் அங்குல அளவு தோல் நீக்கிய பசுமஞ்சள், தேக்கரண்டி மிளகு, 2 பல் வெள்ளைப் பூண்டு, 4 முதல் 5 சிறிய வெங்காயம், துளசி இலைகள் சிறிதளவு (கர்ப்பம் தரிக்க முயலுவோர் துளசியை சேர்க்க வேண்டாம்) இவற்றை ஒன்றாக சேர்த்து இடித்தோ அல்லது மிக்ஸியில் அரைத்தோ விழுதுதாக்கிக் கொள்ளுங்கள். அரைத்த விழுதில் தினமும் ஒரு தேக்கரண்டி எடுத்து வந்தால் குடலில் உள்ள அழற்சி குறையும்.
சமையலில் தினமும் மஞ்சள் சேர்க்கும் பழக்கம் உள்ள நாம், இந்த பசுமஞ்சளை எதற்கு சேர்க்க வேண்டும் என்ற ஐயம் எழக்கூடும். சமையலுக்கு பயன்படும் மஞ்சள் தூள், மஞ்சளை வேக வைத்து காய வைத்து தூளாக்கப்படுகிறது. இதனால் மஞ்சளில் உள்ள குர்க்குமின் (curcumin) அளவு 4 முதல் 5 மடங்கு குறைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவேதான் மிகுந்த சத்து நிறைந்த பசுமஞ்சளை உபயோகப்படுத்த அறிவுறுத்துகின்றனர்.
பசுமஞ்சளோடு மிளகு சேர்த்து அரைத்து உண்பதால், நமது உடல் குர்க்குமினை உறிஞ்சும் தன்மை அதிகமாகிறது. அரைத்த விழுதை பிரிட்ஜில் வைத்தும் உபயோகிக்கலாம். தீராத மூட்டு வலியை தீர்க்கவும், உடல் பருமனுக்கும் சிறந்த தீர்வாகவும் பசு மஞ்சள் அமைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது. அதிக செலவில்லாத இந்த பசுமஞ்சள் வைத்திய முறையை, இப்போது மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள். இதனுடன் சேர்த்து நல்ல உணவு பழக்கமும், வாழ்வியல் முறையும், உடற்பயிற்சியும் உங்களை ஆரோக்கியமாக பேணும்.