இந்த இடங்களில் எல்லாம் முகக்கவசம் கட்டாயம் அவசியம்.! சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்.!



m subramaniyan talk about corona

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தநிலையில், மக்கள் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றத் தவறிவிட்டனர்.

தமிழகத்தில் நேற்று ஒருநாள் மட்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது தடுப்பூசி போடப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகியதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. இதனால் 10-க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மேலும், கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை அனைவரும் போட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.