அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
ஆண் - பெண் உடலமைப்பு மாறுபாட்டில் இவ்வுளவு அற்புதமா?... தெரிஞ்சுக்கோங்க., ஆச்சரியப்பட்டு போவீங்க.!
ஆண் - பெண் ஒப்பிடுகையில் மார்பகம், பிறப்புறுப்பு, கர்ப்பப்பை உட்பட உடலின் ஒருசில பாகம் மாறுபட்டு இருக்கும் என்பது தெரிந்த ஒன்று. இதனைத்தவிர்த்து பல ஆச்சர்யமூட்டும் பல்வேறு தகவல்கள் உள்ளன. அது குறித்து இன்று காண்போம்.
நோய்களால் பாதிக்கப்பட்டு மரணம் அடைவோரை ஒப்பிடுகையில் பெண்கள் விடவும் ஆண்களே அதிகம் இறப்பை தழுவுகின்றனர். மார்பக புற்றுநோய், இனப்பெருக்க கோளாறுகள் மற்றும் கட்டிகள் போன்ற பிரச்சனை பெண்களை பாதிக்கிறது. இவை தவிர்த்துள்ள பல்வேறு நோய்களால் ஆண்கள் உயிரிழக்கின்றனர்.
வளர்சிதை மாற்றத்தின் விகிதத்தை பொறுத்தமட்டில் பெண்களை விட ஆண்களுக்கு அதிகளவு உள்ளது. எலும்புகளின் கட்டமைப்பு பாலினத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். பெண்ணின் தலை ஆண்களின் தலையை ஒப்பிடுகையில் குறுகி இருக்கும். ஆனால், முகம் அகலமாக இருக்கும். அதனைப்போல, பெண்களின் கால்கள் குறுகியும், தண்டுவடம் நீண்டும் இருக்கும்.
பெண்களின் பற்களை விட ஆண்களின் பற்கள் அதிக காலம் நீடித்து இருக்கும். வயிறு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புக்கள் ஆண்களை விடவும் பெண்களுக்கு பெரியதாக இருக்கும். நுரையீரல் பெண்களுக்கு சிறியதாக இருக்கும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், பெண்களின் நுரையீரல் கொள்ளளவு ஆண்களை விட 30 % குறைவாக இருக்கும்.
பெண்களுடைய இரத்தத்தில் நீர் அதிகளவில் இருக்கும். ஆனால், இரத்த சிவப்பணுக்கள் 20 % குறைவாக இருக்கும். இரத்த சிவப்பணுக்கள் உடலுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்து வருகிறது. இது குறைவாக இருப்பதால், பெண்கள் எளிதில் சோர்வடைந்துவிடுவார்கள். மயக்கமும் அதனைப்போல விரைந்து ஏற்படும்.
ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிகளவு வெப்பநிலையை தாங்கிக்கொள்ளும் சக்தி உண்டு. கடுமையான வெயிலையும் பெண்கள் தாங்கிக்கொள்வார்கள். இதற்கு வளர்சிதை மாற்றமே கரணம் ஆகும். ஆண்களை விடவும் பெண்கள் உடலியல் செயல்பாடுகளில் 3 முக்கிய விஷயங்களை கொண்டுள்ளனர். மாதவிடாய், கர்ப்பம் மற்றும் பாலூட்டுதல் போன்ற செயல்பாடுகளே அவை.
பெண்களின் ஹார்மோன் வடிவம் என்பது மிகுந்த சிக்கல் கொண்டது, மாறுபட்டது. அதன் சுரப்பிகளின் செயல்பாட்டிலும் வித்தியாசங்கள் உண்டு. பெண்களுடைய தைராய்டு சுரப்பி பெரியதாக இருக்கும், சுறுசுறுப்பாகவும் செயல்படும். மேலும், மாதவிடாய் மற்றும் கர்ப்பகாலத்தில் இது விரிவடையும் தன்மையும் கொண்டது. மென்மையான சருமம், உரோமம் இல்லாத உடல் போன்றவற்றுடன் தொடர்புடையது.
பெண்கள் வெகு எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். ஆண்களை ஒப்பிட்டு பார்த்தால் சிரிப்பு, அழுகை என அத்துணை உணர்ச்சிகளும் நொடிப்பொழுதில் வெளிப்படுத்தும் தன்மை கொண்டவர்கள். இதற்கு முக்கிய காரணம் ஹார்மோன்களின் செயல்பாடுகள் ஆகும்.