அசத்தல் டிப்ஸ்.. குளிர்காலத்தில் சருமத்தின் அழகை மேம்படுத்த கட்டாயம் சாப்பிடவேண்டிய பழங்கள்..!



Rainy Season Face Beauty Fruits Tips Tamil

குளிர்காலத்தில் நிலவும் குளிர்ந்த வெப்பநிலை, குளிர்ந்த காற்று, ஈரப்பதம் போன்றவை சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். சருமத்தில் வறட்சி, நீரிழப்பு, முகப்பரு போன்ற பிரச்சனைகளையும் வரவழைக்கும். இக்காலங்களில் கீழ்காணும் பழங்களை சாப்பிடுவது சருமத்தில் உள்ள வறட்சியை சரி செய்யும். அவை குறித்து இன்று காணலாம்.

பப்பாளி:
பாப்பைன் நொதி நிறைந்து காணப்படும் பழங்களில் ஒன்று பப்பாளி ஆகும். இதில், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, ஆண்டி-ஆக்சிடென்ட் போன்றவை உள்ளன. இவை சருமத்திற்கு ஈரப்பதம், ஊட்டச்சத்தை வழங்கும். முதுமையை தவிர்க்க உதவும். உடலின் வெப்பநிலையை அதிகரிக்க உதவும் பழங்களில் பப்பாளி ஒன்று என்பதால், குளிர்காலத்தில் குளிர்ந்த வானிலையை எதிர்த்து போராட உதவும். 

health tips

மாதுளை:
புத்துணர்ச்சியூட்டும் சக்தியை கொண்டுள்ள மாதுளை, சருமத்தின் துளைகளை போக்க உதவி செய்கிறது. சருமத்தில் இருக்கும் சுருக்கம் குறைந்து, சருமம் முதுமை தோற்றம் பெறுவது தள்ளிப்போகும். சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். ஊட்டச்சத்து கிடைக்கும். 

அன்னாசி:
வைட்டமின் சி & புரோமைலின் சத்துக்கள் நிறைந்துள்ள அன்னாசிப்பழம், குளிர்காலத்தில் சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். குளிர் காலத்தில் உடலை சூடாகவும், எண்ணெய் பசையுடனும் வைக்க அன்னாசிப்பழம் உதவும். இதில் உள்ள வைட்டமின் சி, ஆண்டி ஆக்சிடென்ட் முகப்பரு, தழும்பு, கரும்புள்ளியை நீக்க உதவி செய்யும்.

health tips 

கி.வி.:
அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ள கி.வி பழம் பருக்கள், தடிப்புகள், தோல் அலர்ஜியை குறிக்கும் தன்மை கொண்டது ஆகும். சருமத்தை சுத்தம் செய்யவும் உதவி செய்யும். வைட்டமின் சி வலுவான சருமத்தை உருவாக்கும். வைட்டமின் ஈ சருமத்தை பளபளப்பாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்கும். 

வாழைப்பழம்: 
வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பொட்டாசியம் நிறைந்துள்ள வாழைப்பழம் சருமத்தின் பளபளப்பை மேம்படுத்தும். சருமத்தில் இறக்கும் இறந்த செல்களை நீக்கி சருமத்தின் பிரகாஷத்தை அதிகரிக்கும். குளிர்கால சரும வறட்சி குறைக்கப்பட்டு ஈரப்பதம் தக்கவைக்கப்படும். அதேபோல, ஆரஞ்சு பழக்கத்தையும் சாப்பிடலாம்.