மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? இதை பின்பற்றுங்க நிச்சயம் பலன் கிடைக்கும்
வாயுத் தொல்லை என்பது பலருக்கு பல சமயங்களில் மிகப்பெரிய மன சங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறது. மேலும் வயிற்று பகுதி உப்புதல், புடைத்தல் போன்ற காரணங்களால் சரிவர சாப்பிடவும் முடியாது. சில சமயங்களில் மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்படுகிறது.
இந்த வாயுத் தொல்லை ஏற்பட பல காரணங்கள் உண்டு. சிலருக்கு தற்காலிக வாயுத் தொல்லை ஏற்படலாம். இது எதனால் ஏற்படுகிறது என மருத்துவ நிபுணர்கள் அறிவர். ஆனால் பொதுவாக வாயுத் தொல்லையை நாம் உண்ணும் உணவுகளின் மூலமே எளிதாக கட்டுப்படுத்த முடியும். அத்தகைய வல்லமை கொண்ட உணவுகள் குறித்துப் பார்ப்போம்.
மிளகு:
மிளகை பொடி செய்து 50 கிராம் எடுத்து, 2 டம்ளர் நீரில் சேர்த்து 20 நிமிடங்கள் நன்றாக காய்ச்சி, அந்த நீரை வடிகட்டி, கால் டம்ளர் அளவு என மூன்று வேளை அருந்தினால் வாயுத் தொல்லை குணமாகும்.
சீரகம்:
சீரகம், ஏலக்காய், சோம்பு போன்றவை மிகச் சிறந்த நிவாரணிகளாகும். வாயுத் தொல்லை ஏற்பட்டவுடன் இதனை வெறும் வாயில் மென்றால் உடனே நல்ல பலன் கிடைக்கும்.
பப்பாளி:
வாயு உருவாகும் சமயங்களில் பப்பாளி ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளுங்கள். இது வாயுவை சமன் செய்கிறது. ஜீரண அமிலங்களை முறையாக தூண்டுகிறது. இதனால் வாய்வு தடுக்கப்படுகிறது.
சுக்கு காபி:
சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும். காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல், மற்றும் சுக்கு இவற்றில் தேவையான அளவு சமமாக எடுத்து இவற்றை நெய்யுடன் வறுத்து பொடியாக்கி சாப்பிட்டால் வாயுத் தொல்லைக் குணமாகும்.
புதினா இலைகள்:
புதினா அமில உற்பத்தியை தடுக்கிறது. வாய்வினால் அவதியுறும்போது புதினா இலைகளை மென்றால் நல்ல தீர்வு கிடைக்கும்.
வாழைப்பழம்:
வாழைப்பழம் மிகச் சிறந்த பலனை தரும். வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் உடனடியாக வாழைப் பழம் சாப்பிட்டால் கட்டுப்படுத்திவிடும்.
தேங்காய்:
தேங்காய் துருவலை சாப்பிடலாம் அல்லது தேங்காய் நீர் அல்லது தேங்காய் பாலை குடிப்பதால் வாய்வு தொல்லை குணமாகிறது. இவை ஜீரண உறுப்புகளை ஆசுவாசப்படுத்தி அமில உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது.
பேரிக்காய்:
ஆப்பிளைப் போன்ற சத்துக்களுடன் இருக்கும் பேரிக்காயும் வாய்வுத் தொல்லையிலிருந்து விடுதலை தருகிறது. ஜீரண சக்தியையும் தூண்டும். தினமும் 1 பேரிக்காய் சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை உண்டாகாது.