மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தூக்கமின்மையை சரி செய்ய மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த 5 பழங்கள் போதும்.!?
வளர்ந்து வரும் தூக்கமின்மை பிரச்சனை
தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினாலும் மாறிவரும் உணவு பழக்கங்களினாலும் பல வகையான நோய் பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். குறிப்பாக பலரும் மன அழுத்தம், கவலை, அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை போன்றவற்றினால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியாமல் இருந்து வருகின்றனர். இதனால் தூக்கமின்மை உள்ளிட்ட பலவகையான நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.
தற்போதுள்ள இளைய தலைமுறையினர் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் தூக்கமின்மை பிரச்சனை என்பது அதிகமாக இருந்து வருகிறது. இந்த தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்ய பல மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் இவை பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றது. எனவே பக்கவிளைவுகள் இன்றி தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்ய இந்த ஐந்து பழங்களை சாப்பிடலாம். என்னென்ன பழங்கள் என்பதை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?
தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்யும் பழங்கள்
1. பப்பாளி - இதில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி, போலெட், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் நாம் உண்ணும் உணவை எளிதில் ஜீரணம் செய்ய வைத்து தசைகளை தளர்த்துகிறது. இவ்வாறு செய்யும் போது தூக்கமின்மை பிரச்சனை தீரும்.
இதையும் படிங்க: கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பட்டை.. வேறு என்னென்ன நன்மைகள்.!?
2. கிவி - கிவி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மன அழுத்தத்தை குறைத்து, தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்யும்.
3. ஆப்பிள் - ஆப்பிளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி தூக்கமின்மை பிரச்சனையை வரவிடாமல் செய்கிறது.
4. செர்ரி - இந்த பழங்களில் உள்ள செரடோனின் என்ற வேதிப்பொருள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால் இது தூக்கமின்மையை சரி செய்யும் மருந்தாகவே கருதப்பட்டு வருகிறது.
5. வாழைப்பழம் - வாழைப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் பி6, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள மக்னிசியம் உடலுக்கு கிடைத்துக் தூக்கமின்மையை சரி செய்வதோடு, தூக்கத்தை மேம்படுத்தி சுறுசுறுப்பாக இருக்க செய்கிறது.
இதையும் படிங்க: நம் முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகை மலர்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா.!?