#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அச்சச்சோ.. பெண்களே உஷார்.. அந்த இடத்தில் வலி அறிகுறி இருக்கா? இதுவாக இருக்கலாம்..!
கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சனை மற்றும் அதனை தவிர்க்கும் வழிமுறை தொடர்பாக தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
கருப்பை நீர்கட்டிகள் பெரும்பாலும் மாதவிடாய் சுழற்சியுடன் வந்து செல்வது இயல்பு. ஆனால், 20 விழுக்காடு பெண்களுக்கு ஏற்படும் நீர்கட்டிகள் தானாக மறைவது கிடையாது. இதனை சரி செய்ய சில நேரம் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. மேலும், அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் உடல் நலமும் பாதிக்கப்படுகிறது.
கர்ப்பப்பை நீர்கட்டிகள் சில சமயத்தில் கர்ப்பப்பை பைப்ராய்டு, மாதவிடாய்க்கு முன்னதாக ஏற்படும் வயிற்று மந்தம், இடுப்பு வலி போன்றவற்றை ஏற்படுத்துகிறது. மாதவிடாய் நாட்களை போல, நீர்கட்டியும் வலியும் ஏற்பட்டால் மறைய வேண்டும். இவை சரியாகாமல் இருந்தால் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்வது நல்லது. இடுப்புக்கு கீழே, வலது மற்றும் இடது பக்கத்தில் வலி இருந்தால், அது கருப்பை நீர்கட்டிகள் பொதுவான அறிகுறியாக இருக்கலாம்.
மாதவிடாய் நாட்கள் முடிந்தும் மேற்கூறிய இடங்களில் வலிகள் ஏற்பட்டால், அது அதிகளவு வலியை உணரச்செய்தால் மருத்துவரை சந்திப்பது நல்லது. கர்ப்பப்பை நீர்கட்டியும் வயிற்றில் கனமான உணர்வை ஏற்படுத்தும். சிறுநீர் கழித்தல், பிற செயல்பாடுகளில் எவ்வித பிரச்னையும் இல்லாமல், வயிற்று கனமாக உணரவைத்து இருந்தால் அது வாரத்திற்கு நீடித்தால் சோதனை அவசியம்.
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதை போன்ற உணர்வு, சிறுநீர் கழித்தாலும் சிறுநீர் வெளியேற்றத்தில் ஏற்படும் சிரமம், சிறுநீரக கோளாறுகள் போன்றவை ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை செய்துகொள்வது நல்லது. கர்ப்பப்பை நீர்க்கட்டி பெரிதாக வளரும் நேரத்தில், கருப்பை வாயின் அருகே வளர்ந்திருக்கும் பட்சத்தில், தாம்பத்தியத்தின் போது பெண்களுக்கு வலி ஏற்படலாம்.