அடடே.. வடித்த சாதத்தின் கஞ்சியை குடித்தால் இவ்வுளவு நன்மைகளா?.. அசத்தல் டிப்ஸ் தெரிஞ்சிக்கோங்க.!
இன்றுள்ள இளம் தலைமுறை பழைய சோறு, வடித்த கஞ்சி சாதம் என்றாலே எட்டடி பாய்ந்து ஓடுகிறது. ஒருகாலத்தில் இதனை கேட்டு அம்மாவிடம் அடம்பிடித்து அடிவாங்கிய பிள்ளைகள் ஏராளம்.
குக்கரில் உணவை சமைத்து சாப்பிடுவதை விட வடித்த சாதத்தினை சாப்பிடுவதே நல்லது. சாதம் வடித்த தண்ணீரை குடித்தால் இறப்பை குடல் அலர்ஜி பிரச்சனை தடுக்கப்படும்.
உடலின் வெப்பநிலை பராமரிக்கப்படும். புற்றுநோய் வளற்சி செல்களை தடுக்கலாம். சாதம் வடித்த கஞ்சியில் கல் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் இரத்தக்கட்டு வீக்கம் உள்ள இடங்களில் வைக்கலாம்.
அதேவேளையில், வடித்த கஞ்சி நீரை அளவுடன் பருகுதல் நல்லது. அதில் உள்ள கொழுப்பு மிகவும் தன்மை கொண்டது என்பதால், உடல் எடை அதிகரிக்கும். வயிற்றில் கொழுப்புகள் அதிகளவு தங்க வழிவகை செய்யும்.