#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா.. நோய்களை குணப்படுத்தும் வாழையிலை.. இவ்ளோ விஷயம் இருக்கா?.. தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!
தமிழர்களின் அடையாளமாக இருக்கும் வாழை இலை பல நன்மைகளை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. இன்றளவும் விசேஷ நாட்களில் வாழையிலை விருந்து என்பது தவறாமல் இருக்கும்.
கிராமங்களிலும், நகர்புறங்களிலும் இன்றும் வாழையிலையில் உணவளிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. சில உணவகங்களில் வாழை இலை உணவுகள் பரிமாறப்பட்டு அவை வரவேற்பையும் பெறுகின்றன.
வாழையிலையில் சாப்பிடுவதால் இளநரை பிரச்சனை இருக்காது. முடி கருப்பாக இருக்கும். தீக்காயம் ஏற்பட்டவர்களை வாழை இலையின் மீது படுக்க வைப்பது நல்லது. அப்போது சூட்டின் தாக்கம் குறைவாக இருக்கும்.
வாழை இலையில் பேக்கிங் செய்யும் சாப்பாடு மணமாகவும், கெடாமலும் இருக்கும். காயமுள்ள தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெயை துணியில் நனைத்து புண்மீது தடவி வாழை இலையை வைத்து கட்டினால் விரைந்து குணமாகும்.
அதேபோல சொரியாசிஸ், தோல் அலர்ஜி, கொப்புளங்கள் போன்ற பாதிப்புள்ள இடத்திலும் வாழை இலையை தடவி பயன்படுத்தலாம். இதனால் கிருமிகளின் தாக்கம் குறையும்.