வீட்டுக்குள்ள அடிதடி, வெளிய கொண்டாட்ட கும்மியடி.. இது பிக் பாஸ் தோழர்கள் சங்கம்.! வைரல் வீடியோ இதோ.!
நமது நியாபக சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
நாம் ஒவ்வொரு செயலிலும் கவனமாக ஈடுபடுவதும், மந்தமாக ஈடுபடுவதும் நமது ஞாபக சக்தியை பொருத்து அமையும். பார்த்தவற்றை ஞாபகம் வைத்துக் கொள்ளும் அறிவுத்திறன் மிக்க நபர்கள் முதல், எளிதில் நினைவுகளை மறக்கும் நபர்கள் வரை பலரும் இருக்கிறோம்.
இதில் மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பதே ஞாபக சக்தி குறைவதற்கான காரணமாக அமைகிறது. மூளையின் செயலை திறம்பட மேம்படுத்தி நமது நினைவாற்றலை சில உணவுகள் அதிகரிக்கும். அவ்வப்போது நமது உணவில் மீன் சேர்த்துக் கொள்வது நல்லது.
மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு மூளையில் உள்ள நரம்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தும், ஞாபக சக்தியை அதிகரிக்கும். அதிக ஊட்டச்சத்து நிறைந்த பருப்பு வகையாக கருதப்படும் வால்நட், மூளையின் செயல்பாட்டை அதிகரித்து அல்சைமர் மற்றும் இதய நோய் கோளாறுகளிலிருந்தும் நம்மை பாதுகாக்கும்.
கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்றதாக இருக்கும் வால்நட், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவில் வைட்டமின் பி6, பி 12 போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் இருக்கும் கொலின் என்ற வேதிப்பொருள் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவி செய்கிறது. மஞ்சள் கருவில் நிறைந்திருக்கும் கோலின் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் ஞாபக சக்தியை அபரீதமாகும்.
பூசணி விதையில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடன்ட், செல்களின் ஆரோக்கியத்தை புதுப்பிக்கும். அதேபோல, நச்சுக்கள் உருவாகும் வாய்ப்பையும் தடுக்கும். மூளைக்குத் தேவையான நுண்சத்துகளை இவை வழங்குவதால் மன அழுத்தம் மற்றும் அல்சைமர் போன்ற பாதிப்புகள் தடுக்கப்படும்.
கொண்டைக்கடலையில் இருக்கும் புரதம், மெக்னீசியம், கார்போஹைட்ரேட் போன்றவை மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவி செய்கிறது. அதேபோல, ஞாபக சக்தியை அதிகரிக்கும் திறனும் இதற்கு உண்டு.