கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை ஏற்பட காரணம் என்ன?..! சித்த மருத்துவ இயற்கை குறிப்பு..!



 What causes uterine cyst problem and Solutions

சினைப்பைநீர்கட்டி என்பது நோய் கிடையாது. குறைபாடு தான். சினைமுட்டை வெளிவராத காரணத்தால் ஏற்படும் கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை, பெண்களை பல்வேறு வயதிலும் பாதிக்கும்.

தற்போதுள்ள பல பெண்களுக்கு PCOS, PCOD என்ற கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை உள்ளது. கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை ஏற்பட முக்கிய காரணமாக வர்களின் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக அமைகிறது. இந்த பிரச்சனைக்கு வயதுக்கு ஏற்றாற்போல சிகிச்சை அளிக்க வேண்டும். 

மாதவிடாய் சுழற்சி மாதாமாதம் சீராக இல்லாமல் தாமதமாக ஏற்படுவது, மூன்று மாதம் மற்றும் இரண்டு மாதம் என மாதத்துடன் வெளியேறுவது போன்ற காரணமும், ஹார்மோன் குறைபாடும் காரணமாக அமைகிறது. சினைமுட்டை சினைப்பையை மாதாமாதம் விடுவிப்பது இயற்கையானது ஆகும். இந்நிகழ்வு தடைபடும் போது சினைப்பையில் சிறுகட்டி ஏற்பட்டு நீர்கட்டியாக மாறுகிறது. 

PCOS

பல நீர் கட்டிகள் கர்ப்பப்பையில் தோன்றுவதன் காரணமாக பாலிசிஸ்டிக் ஓரியன் சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்படும். இது குழந்தையின்மை பிரச்சனைக்கு காரணமாக அமைகிறது. பெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்கும் தொடர்பு இருப்பதால், அது சார்ந்த பிரச்சனையை ஏற்படுத்துகிறது. 

கருப்பை நீர்கட்டியின் அறிகுறி: 

அசாதாரண மாதவிடாய் சுழற்சியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆண்களின் ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதால் காரணமாக முகத்தில் உரோமம் வளரும். முடி கொட்டும். குரல் வேறுபாடும். முகத்தில் பரு, உடல் எடை அதிகரிப்பது, மன அழுத்தம் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பிரச்சனையும் ஏற்படும். 
 
இந்த நீர்க்கட்டி கரைய, கழற்சிக்காயை வாங்கி அதில் உள்ள பருப்பை ஒரு மாதம் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் நல்லது. இந்த பருப்புடன் 3 மிளகு சேர்த்து சாப்பிடலாம். இது கசப்பாக இருக்கும். இருப்பினும், அதனை சாப்பிட்டு வந்தால் நீர்க்கட்டி பிரச்சனை குறையும். கழற்சிக்காய் பருப்புடன் மிளகு சேர்த்து சாப்பிட்டு, மோர் குடிக்கலாம். 

PCOS

கருப்பை நீர்க்கட்டி ஏற்பட காரணம் : 

கருப்பை நீர்க்கட்டி ஏற்படுவதற்கான உறுதியான காரணம் கூற இயலாது. பருவமடைந்த பெண்களில் இருந்து யாருக்கு வேண்டும் என்றாலும் ஏற்படலாம். இதன் அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில் தான் பெரும்பாலும் தெரியவரும். 

பரம்பரை வாயிலாக மரபணுவின் மூலமும் ஏற்படலாம். ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, அட்ரீனல் காட்டிகள் ஹார்மோன் சுரப்பு அதிகரித்தல், டெஸ்ட்டிரோஜன் அதிகரிப்பு, புரோலாக்டின் அதிகரிப்பது போன்றவையும் காரணமாக இருக்கிறது.