சொல்லச்சொல்ல கேட்காத பெற்றோர்.. 38 வயது ஆசிரியை விபரீத முடிவு.. கண்ணீரில் பெற்றோர்.!



in Chennai a Teacher Dies by Suicide

சென்னையில் உள்ள மந்தைவெளி, திருவேங்கடம் தெருவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மாளவிகா (38). அபிராமிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், ஆசிரியையாக வேலை பார்க்கிறார்.

திருமணத்துக்கு எதிர்ப்பு

தற்போது வரை இவருக்கு திருமணமாகவில்லை என்பதால், அவரின் பெற்றோர் தொடர்ந்து வரன் பார்த்து வந்துள்ளனர். திருமணம் தொடர்பான விஷயத்தில் விருப்பம் இல்லாத மாளவிகா, பெற்றோரின் செயலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: JustIN: சென்னை: வங்கி, நிதிநிறுவனம் என 20 இடங்களில் ரூ.5 கோடி கடன்.. கழுத்தை நெரித்த சுமையால் 10 நாட்களில் குடும்பத்தோடு விபரீதம்.! 

chennai

ஆசிரியை தற்கொலை

மகளின் கருத்துக்களை மீறி பெற்றோர் வரன் தேடும் படலத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வருத்தத்தில் இருந்த மாளவிகா, நேற்று காலை நேரத்தில் வழக்கம்போல நடைப்பயிற்சிக்கு சென்று வந்தார்.

பின் திடீரென குடியிருப்பு வளாகத்தின் 09 வது மாடிக்குச் சென்றவர், கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், ஆசிரியை மரணம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: தவெக கட்சியில், விஜயின் உதவியாளர் மகனுக்கு மா.செ பொறுப்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!