மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பப்ஜி கேம் விளையாடிய 10 இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு! காவல்துறை அதிரடி
குஜராத்தில் பப்ஜி கேம் விளையாட தடை விதித்த பின்பும், ராஜ்கோட் பகுதியில் பப்ஜி கேம் விளையாடிய 10 இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் இன்று பிரபலமாக பேசப்படும் மொபைல் கேம் பப்ஜி. பள்ளி மாணவர்கள் முதல் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் வரை பலரும் இந்த கேமினை விளையாடி வருகின்றனர். பலர் இதற்கு அடிமையாகவே உள்ளனர் என்று கூட கூறலாம்.
குஜராத்ததல் இந்த கேமிற்கு எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, கடந்த மார்ச் 6 ஆம் தேதி, இந்த கேமினை தடை செய்து குஜராத் அரசு அரசானை வெளியிட்டது.
இருப்பினும், இந்த அரசானையை மீறி பப்ஜி கேமினை குழுவாக சேர்ந்து விளையாடிய 10 பேர் மீது ராஜ்கோட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் 6 பேர் கல்லூரி மாணவர்கள்.
இதுகுறித்து தகவலளித்துள்ள காவல்துறையினர், "இவர்கள் அனைவரின் மீதும் அரசானையை மீறிய குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேர் காவல் நிலையம் அருகிலேயே குழுவாக சேர்ந்து பப்ஜி கேமினை விளையாடினர். காவல்துறையினர் அருகில் சென்று விசாரணை செய்வதை கூட பொருட்படுத்தாமல், அவர்கள் மிகத் தீவிரமாக கேமினை விளையாடினர்" என தெரிவித்துள்ளனர்.