மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
103 வயதில் 3வது திருமணம் செய்த முதியவர்.. இதுதான் காரணமா?
மத்திய பிரதேசம் மாநிலத்தில் 103 வயது முதியவர் ஒருவர் மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார்.
மத்தியபிரதேசம் மாநிலம் போபாலின் இத்வாரா பகுதியை சேர்ந்தவர் ஹபிப் நாசர். 103 வயதான இவர் சுதந்திரப் போராட்ட வீராவார். இவருடைய முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி காலமான நிலையில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
இதனையடுத்து தனக்கு ஆறுதலாக, அன்புடன் கவனிப்பதற்கு யாரும் இல்லாததால் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 49 வயதான பிரோஸ் ஜகான் என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களின் திருமணம் கடந்தாண்டு நடைபெற்ற நிலையில், தற்போது அவர்களுடைய திருமணம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி திருமணம் முடிந்து ஆட்டோவில் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து சென்ற போது அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட ஹபிப் நாசருக்கு அங்கிருந்தவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அப்போது அவர் மகிழ்ச்சியுடன் அவர்களுடன் உரையாடுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.