96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
செல்போனால் வந்த வினை... உத்திர பிரதேசத்தைச் சார்ந்த 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.!
உத்திரபிரதேச மாநிலத்தைச் சார்ந்த பன்னிரண்டு வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
உத்திர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தைச் சார்ந்த 12 வயது சிறுமி செல்போன் மூலம் மூன்று இளைஞர்களிடம் பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அந்த சிறுமியை தனியாக இந்த மூன்று இளைஞர்களும் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மூன்று இளைஞர்களும் சேர்ந்து சிறுமியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
அவர்களது மிரட்டலுக்கு பயந்து இவ்வளவு நாளும் அமைதியாக இருந்து சிறுமி தற்போது நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் விவரித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர்.
காரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை செய்து சிறுமியுடன் நண்பர்களாக பழகி அவரை பாலியல் வன்புணர்வு செய்தபங்கஜ், விஷால், சுக்ரீவ் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.