மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
14 வயது சிறுவன் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து மரணம்; வகுப்பறையில் மாரடைப்பால் நடந்த சோகம்.!
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர், கர்த்தானி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன், அங்குள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில், கடந்த டிசமபர் 19ம் தேதி சிறுவன் பள்ளிக்கு சென்ற நிலையில், தனது வகுப்பறைக்கு சென்றுகொண்டு இருந்தாதபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து, பள்ளி நிர்வாகத்தால் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட சிறுவன், மாரடைப்பால் உயிரிழந்தது மருத்துவர்களின் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. வரும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனின் மரணத்திற்கு பெற்றோர் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இதனால் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.