#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பக்கத்து வீட்டில் கேட்ட தங்கையின் அலறல் சத்தம்! ஓடிச்சென்று பார்த்த14 வயது சிறுவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! பின் நடந்த ஆச்சர்யம்!!
மும்பையின் ஜுஹு பகுதியில் உள்ள ஒரு பெரிய அப்பார்ட்மென்டில் வாழ்ந்து வந்த தம்பதியினருக்கு 6 வயதில் பெண் குழந்தையும் ,14 வயது மகனும் உள்ளனர். பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில் அந்த குழந்தைகள் இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இந்நிலையில் அண்மையில் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றுவிட குழந்தைகள் இருவரும் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர். இந்த நிலையில் டிவி சரியாக தெரியாத நிலையில் 6 வயது சிறுமி பக்கத்து வீட்டில் வசித்துவந்த 45 வயதான நபரிடம் உதவி கேட்க சென்றுள்ளார்.
ஆனால் அவரது பெற்றோர்கள் வீட்டில் இல்லாததை அறிந்த அந்த நபர் சிறுமியை அறைக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அவரது நடவடிக்கைகளால் பயந்துப் போன சிறுமி கத்தி கூச்சலிட்டுள்ளார். தன் தங்கையின் அலறல் சத்தம் கேட்டு 14 வயது சகோதரர் ஓடிச் சென்று அவரது வீட்டிற்குள் பார்த்துள்ளார். அங்கு தனது தங்கையிடம் அந்த நபர் கொடூரமாக நடந்து கொள்வதை கண்ட அவர் அவரிடமிருந்து தைரியமாக தங்கையை காப்பாற்றியுள்ளார்.
பின்னர் உடனே இதுகுறித்து தனது பெற்றோருக்கு போன் செய்து தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ந்து போன அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு விரைந்த அவர்கள் பக்கத்து வீட்டு நபர் மீது வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் 14 வயது சிறுவனின் துணிச்சலான செயலையும் பாராட்டியுள்ளனர்.