வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
பஞ்சாபில் பயங்கர சம்பவம்.. இரட்டை குழந்தை கர்ப்பிணி பெண் எரித்துக்கொலை!
6 மாத இரட்டை குழந்தையை வயிற்றில் சுமந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கட்டிப்போடப்பட்டு தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பஞ்சாப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ரய்யா கிராமத்தை சேர்ந்தவர் சுக்தேவ். இவருக்கு பிங்கி என்ற பெண்ணுடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில், பிங்கி 6 மாதங்களுக்கு முன் கர்ப்பமாகியுள்ளார். அதன்படி, பிங்கியின் வயிற்றில் இரட்டை கரு வளர்ந்து வந்துள்ளது.
திருமணமானதிலிருந்து, தனது மனைவி பிங்கியின் மீது சந்தேகப்பட்ட சுக்தேவ் அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். எனவே, கொடுமை தாங்க முடியாத, பிங்கி அடிக்கடி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இவ்வாறு செல்லும் போதெல்லாம் சுக்தேவ் தனது மனைவி பிங்கியை சமாதானம் செய்து மீண்டும் அழைத்து வந்து கொடுமை செய்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் நடந்ததாக குறிப்பிடப்படும் நாளில் கணவன் - மனைவிக்கு இடையே மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சுக்தேவ் மனைவியை கட்டிலில் கட்டி வைத்து வைத்துள்ளார். அதன் பின்னர் வீட்டில் கிடந்த பெட்ஷீட் மற்றும் துணி போன்றவற்றை மனைவி மீது எடுத்து போட்டு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதனால், வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சலிட்டு கதறி துடித்த பிங்கி காப்பாற்ற யாரும் வராததால், அடுத்த சில நிமிடங்களில் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரைவிட்டார். இதனையடுத்து, ஓடிவந்து பார்த்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் வந்து பிங்கியின் உடலை, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர், இந்த சம்பவம் குறித்து சுக்தேவ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சுக்தேவை வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர். கர்ப்பிணி பெண் ஒருவர் வயிற்றில் குழந்ததையுடன் தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.