மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜே.சி.பி டயருக்கு காற்று நிரப்புகையில் சோகம்.. டயர் வெடித்து 2 பேர் பரிதாப பலி.!
ஜேசிபி வாகனத்தின் டயரில் காற்று நிரப்பியபோது, டயர் வெடித்து சிதறியதில் இருவர் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதியில் சில்தாரா தொழிற்சாலை வாகனபணிமனை உள்ளது. அங்கு ஜேசிபி வாகனத்தின் டயரில் காற்று நிரப்புவதற்காக இருவர் சென்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து டயரில் காற்று நிரப்பிய நிலையில், எதிர்பாராதவிதமாக டயர் வெடித்ததில் தொழிலாளர்கள் இருவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
பின் இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.