திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: 2024 மக்களவை பொதுத்தேர்தல்; பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. பிரதமர் மோடிக்கு எந்த தொகுதி?.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
2024 மக்களவை பொதுத் தேர்தலுக்கான விறுவிறுப்புடன் அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் சார்பில் INDIA கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டணி காட்சிகளுக்கான தொகுதி பங்கீடு, தேர்தல் பரப்புரை என அடுத்த 60 நாட்கள் தேர்தல் காரணமாக இந்தியாவே அரசியல் பரபரப்பில் களைகட்டும். தேர்தல் ஆணையமும் தனது தீவிர செயல்பாடுகளில் களமிறங்கி செயல்படும்.
இந்நிலையில், பாஜக சார்பில் 195 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
195 பேர் பட்டியலில் இம்முறை பாஜக சார்பில் 47 இளைஞர்கள், 18 பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது முதற்கட்ட பட்டியலின்படி உறுதியாகியுள்ளது.