திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
20 வயது மகள் கர்ப்பம்.. காம வெறிப்பிடித்த தந்தை கைது!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முகந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டதால், அந்தப் பெண் மற்றொரு நபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த பெண்ணுக்கு முதல் கணவருடன் பிறந்த 20 வயது மகள் உள்ளார்.
இதனையடுத்து 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த 20 வயது பெண்ணை, தாயின் இரண்டாவது கணவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார்.
அதன் பின்னர் வீட்டில் தனியாக இருக்கும் போதெல்லாம் அடிக்கடி அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால், அச்சமடைந்த அந்தப் பெண் பக்கத்தில் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பெண்ணுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து உடனடியாக அந்த சிறுமியை பரிசோதனை செய்ததில் கர்ப்பமாக இருப்பதை தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் உறவினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.