என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
அட பாவமே... "இந்த மழலைய கொல்ல எப்படி மனசு வந்துச்சி..." 3 மாத குழந்தை கொலை.!! தாய் வெறி செயல்.!!

குஜராத் மாநிலத்தில் பெற்ற தாயே தனது 3 மாத கைக்குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக நாடகமாடிய இறந்த குழந்தையின் தாயை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அழுது கொண்டே இருந்த குழந்தை
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரை சேர்ந்தவர் கரிஷ்மா. இவருக்கு திருமணம் ஆகி 3 மாதத்தில் கை குழந்தை ஒன்று இருந்தது. கரிஷ்மா கணவருடன் வசித்து வந்த நிலையில் அவரது குழந்தை அடிக்கடி அழுது கொண்டே இருந்திருக்கிறது. இது கரிஷ்மாவிற்கு மன உளைச்சலையும் ஆத்திரத்தையும் தருவதாக இருந்துள்ளது.
கொலை செய்துவிட்டு நாடகம்
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று கரிஷ்மாவின் குழந்தை அழுதிருக்கிறது. அவர் தனது குழந்தையின் அழுகையை நிறுத்த முயன்றும் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த கரிஷ்மா குழந்தையை தூக்கி தண்ணீர் தொட்டியில் வீசி இருக்கிறார். இதில் தண்ணீரில் மூழ்கிய பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஆனால் கணவர் கேட்டபோது குழந்தை தெரியாமல் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்ததாக நாடகமாடி இருக்கிறார.
இதையும் படிங்க: அடடே... இனி ஆதார் கார்டுக்கு குட்பை.!! புதிய செயலியை அறிமுகப்படுத்திய மத்திய அரசு.!! அட்டகாசமான சிறப்பம்சங்கள்.!!
விசாரணையில் சிக்கிய தாய்
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வீட்டிற்கு வந்து குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கரிஷ்மாவிடம் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியதால் காவல்துறை தங்களது பாணியில் விசாரித்தது. அப்போது குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்ததை கரிஷ்மா ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர். பெற்ற தாயே தனது கை குழந்தையை கொலை செய்த சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: உபி மாடல்.? "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா.." மருமகனுடன் கம்பி நீட்டிய மாமியார்.!!