மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கருகிய இளம் உயிர்... 4 வயது சிறுவனுக்கு எமனான செட்டாப் பாக்ஸ்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் செட்டாப் பாக்ஸை இழுத்த குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை 4 வயது சிறுவன் தனது வீட்டில் டிவியில் கார்ட்டூன் பார்த்து இருந்திருக்கிறான். அப்போது அவனது தந்தை உறங்கி விட்டார்.
அப்போது சிறுவன் டிவிக்கு அருகில் இருந்த செட்டாப் பாக்ஸ் இழுக்க முயன்றுள்ளான். இதனால் மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறான். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கார்ட்டூன் பார்த்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்த குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.