திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
50 வயது வளர்ப்பு தந்தையால் 20 வயது மகளுக்கு நேர்ந்த கொடுமை; 7 மாதமாக சீரழிக்கப்பட்ட அவலம்.!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முகந்த்பூர் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண், தனது தாய் மற்றும் வளர்ப்பு தந்தையுடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று பெண்மணி வீட்டில் தனியாக இஇருந்தபோது, அவரின் வளர்ப்பு தந்தை பெண்ணை பலவந்தமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை தாயிடம் கூறினால் கொலை செய்திடுவதாகவும் மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்துபோன பெண்மணி வெளியில் எதையும் கூறவில்லை.
கடந்த 7 மாதமாக இக்கொடுமை தொடர்ந்த நிலையில், ஒருகட்டத்தில் 50 வயதுடைய வளர்ப்பு தந்தையின் சித்ரவதை தாளாது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், 20 வயது பெண்ணை பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தையை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனையில் பெண் கர்ப்பமாக இருப்பதும் உறுதியாகியுள்ளது.