#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கடவுளே.. ஐஸ்கிரீம் சாப்பிட்ட 55 பேர் மருத்துவமனையில் அனுமதி..! 25 பேர் கவலைக்கிடம்..!!
மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள சாட்டலில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ஐஸ்கிரீம் பரிமாறப்பட்ட நிலையில், ஐஸ்கிரீமை சாப்பிட்ட அனைவரும் அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக அவதிப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் அவசர உறுதி மூலமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 55 பேருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 25 பேர் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த 25 பேரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், ஐஸ்கிரீமில் ஏதேனும் கலகப்பட்டதா? அல்லது காலாவதியான ஐஸ்கிரீம் விநியோகம் செய்யப்பட்டதா? என விசாரணை நடந்து வருகிறது.