மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தடுப்பூசி செலுத்தியதில் 6 மாத குழந்தை பரிதாப மரணம்; பெற்றோர் கண்ணீர்..!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிலிபித் பகுதியில் தடுப்பூசி முகாமில் குழந்தைகளுக்கு ஜூன் 23-ஆம் தேதி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அப்போது தடுப்பூசி செலுத்தப்பட்ட 6 மாத குழந்தையின் உடல்நிலை திடீரென மோசமடைந்த நிலையில், அந்த குழந்தையை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும் அதன் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் குழந்தையின் தந்தை தனது மகளின் உயிரிழப்பிற்கு தடுப்பூசி செலுத்தியதே காரணம் என்று கூறி பிரச்சனை செய்யவே இது குறித்து காவல் நிலையத்திலும் புகாரளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர். மருத்துவ அறிக்கையின் பின்னரே மேற்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.