மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
64 வயதில் மூதாட்டி மொடாக்குடி... போதையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம்.. வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்.!
மதுபோதைக்கு அடிமையான பெண்மணி மது அருந்தி மயங்கி உயிரிழந்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மூலக்குளம், அரும்பாக்கம் குமரன் வீதியைச் சார்ந்தவர் கமலவல்லி (வயது 64). இவரின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார்.
இதனால் தனது மகள் கோவிந்தம்மாள் பராமரிப்பில் கமலவல்லி இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கமலவல்லிக்கு மதுபானம் அருந்தும் பழக்கமானது இருந்து வந்துள்ளது. இதனால் அவ்வப்போது மதுபோதையில் இருந்து வந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று காலை அங்குள்ள விஐபி நகர் காலி மனையில் கமலவல்லி மயங்கி கிடந்த நிலையில், அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நடந்த பரிசோதனையில் கமலவல்லி உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தியதால் மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.