#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அம்மாவின் காதலனால் கொடூரமாக தாக்கப்பட்டு, 8 நாட்கள் போராடி உயிரிழந்த சிறுவன்!
கேரளாவில் அம்மாவின் காதலனால் கொடூரமாக தலையில் தாக்கப்பட்டு 8 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா, இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியைச் சேரந்தவர் அருண் அனந்த். இவர் அதே பகுதியில் கடந்த வருடம் கணவரை இழந்து இரண்டு ஆண் குழந்தைகளுடன் வாழ்ந்த வந்த பெண்ணுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
ஏழு, ஐந்து வயது நிரம்பிய அந்த சிறுவர்களை அருண் அவ்வப்போது துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி இரண்டாவது பையன் நள்ளிரவில் படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக அருண் அவனை கடுமையாக அடித்துள்ளார். தம்பியை காப்பாற்ற ஏழு வயது அண்ணன் குறுக்கே வந்துள்ளான்.
இதனால் ஆத்திரமடைந்த அருண், ஏழு வயது சிறுவனின் தலையில் நடப்பதற்கு பயன்படுத்தும் வாக்கிங் ஸ்டிக் மூலம் பலமாக தாக்கியுள்ளார். சிறுவனின் தலையில் இருந்து இரத்தம் பீறிட்டு வரவே சிறுவர்களின் தாய் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
மிகவும் மோசமான நிலைமைக்கு சென்ற சிறுவனுக்கு கடந்த 8 நாட்களாக கொச்சி மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கேரள முதல்வர் பினரயி விஜயனும் சிறுவனை நேரில் பார்த்துவிட்டு அனைத்து செலவுகளையும் அரசே ஏற்பதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு தனியார் மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளித்தும் எந்தவித பயனுமின்றி நேற்று காலை 11:30 மணியளவில் சிறுவன் உயிரிழந்தான். இரண்டாம் வகுப்பு படித்த சிறுவன் தம்பியை காப்பாற்ற தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனின் இறப்புக்கு காரணமான அருணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அருண், சிறுவர்களை அடிக்கடி கொடுமைப்படுத்தியதாக சிறுவனின் தாயாரும் போலீசில் புகார் அளித்துள்ளார்.