திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"காவியக் காதல்... உனக்கு 35 எனக்கு 75..." இணையதளத்தில் வைரலான திருமண புகைப்படங்கள்.!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 75 வயது காதலன் தனது 35 வயது காதலியை திருமணம் செய்த சம்பவம் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கின்றன.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஏரன்னா. 75 வயதான இவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் அனுஸ்ரீ. இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து காதலர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இந்த காதல் ஜோடி கடந்த ஒன்பதாம் தேதி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 70-ஸ் காதல் என்ற தலைப்பில் அந்தப் புகைப்படங்களை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.